Friday 27 September 2013

'Raja Rani' goes vertical;ராஜா ராணி விமர்சனம்


Ever since its launch this romantic comedy has been the talk of town. Any guesses which movie we are talking about? You're right it is 'Raja Rani'.

ஒவ்வொரு திருமணத்திலும் இணையும் மணமக்கள் திருமணத்திற்கு பின் கிடைத்த வாழ்க்கையை மனமுவந்து வாழ்கிறார்களா இல்லையா என்பது தெரியாது. அப்படி வாழவில்லையென்றால் அதற்கு காரணம் அவர்களது வாழ்க்கையில் இளமை பருவத்தில் மலரும் காதலும் அதனால் ஏற்பட்ட வலியுமாகத்தான் இருக்கும்.
காதலிக்கும் எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைத்துவிடுவதில்லை. காதல் மிகவும் ரம்மியமானதுதான் ஆனால் அது தோல்வியில் முடியும்போது வாழ்க்கை அனைத்தையும் இழந்துவிட்டதுபோல தோற்றும். காதலை இழந்தவரிக்ன் மூளையிலும் ஒரு இருட்டு குடிக்கொண்டு விடுகிறது.  பிறகு வேருஒருவருடன் திருமணம் நடந்தாலும் இந்த இருட்டு விலகாமல் இருந்துவிடுகிறது. திருமணத்தம்பதிகள் தங்களுக்குள் இருக்கும் இருட்டுகளை விலக்கினால்தான் அந்த வாழ்க்கை இனிக்கும். அப்படியில்லையென்றால்…?
இப்போது கதை உங்களுக்கே புரிந்திருக்கும் ஒரு திருமண ஜோடிக்கு விருப்பமில்லாத திருமணம் நடக்கிறது. ஏன் அவர்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்ற வேள்வி எழும்போது இதற்கு முன் இருவரும் ‌வேறு ஒருவருடன் தனித்தனியே அழகிய காதலில் ரசித்து வாழ்கிறார்கள்…
விதிவசத்தால் அந்த காதல் கைகூடாமல் போய்விடுகிறது. இப்படியிருக்க… காதலை பறிகொடுத்த இருஜோடியும் இணையும்போது பழைய பாதிப்பில் இருந்து விலகி இவர்களின் தற்போதை திருமண வாழ்க்கையை எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
ராஜா ராணி… டைட்டில் பேர்டும் போது ஆர்யா-நயன் திருமணம் நடக்கிறது (ஜான்-ரெஜினா). திருமணம் முடிந்த இருவரும் இல்லறவாழ்க்கையில் விருப்பமில்லாமல் எதையோ பறிகொடுத்ததுபோல் வாழ்கிறார்கள். ஒரு வீட்டுக்குள் தனித்தனியே யார் என்பது தெரியாததுபோல் ஒரு வாழ்க்கையை நடத்துகிறார்கள்..

ஆர்யாவுடன் ஏன் சேர்ந்து வாழ மறுக்கிறார் நயன்தாரா என்று நினைக்கும் போது பிளாஸ்பேக்….
நயன்தாரா தன்னுடைய செல்போன் வேலை செய்யவில்லை என்பதற்காக கஸ்டமர்கேர்-க்கு போன் செய்கிறார். அங்கு இருப்பது சூர்யாவாக ஜெய்…  சண்டை திட்டில் ஆரம்பிக்கும் இவர்களது பழக்கம் கடைசியில் காதலில் முடிகிறது. அதன்பிறகு விழுந்து விழுந்து காதலிக்கும் இவர்கள் பதிவு திருமணம் செய்ய காத்திருக்கிறார் நயன்..கடைசி வரை ஜெய் வராததால் ஏமாந்து திரும்பும் ‌நயன்.. ஜெய் ‌‌அமெரிக்கா சென்றதும் அதன்பிறகு அங்கு தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவருகிறது… பிறகு அப்படியே நெடிந்துப்போகிறார்… வாழ்க்கையை வெறுக்கிறார்….
தைரியமற்ற கொஞ்சம் வெகுளி கதாபாத்திரத்தில் அடிக்கடி பயத்தில் அழுதாலும் படம்பார்ப்பவர்களை சிரிக்கவைத்து கைத்தட்டல் வாங்குகிறார் ஜெய்…
இடைவேளைக்கு பிறகு… குடும்ப வாழ்க்கையை ஏன் ஆர்யா வெருக்கிறார் என்பதற்கு அதற்கு ஒரு பிளாஸ்பேக்….
ஆர்யாவும் சந்தானமும் செக் வாங்க செல்லும் ஒரு வீட்டில் ஆர்யா.. நஸ்ரியாவை பார்க்க இருவருக்கும் பற்றிக்கொள்கிறது காதல்… பிரதர் என்று வெறுக்கும் நஸ்ரியாவை விரட்டி விரட்டி காதலிக்க வைக்கிறார் ஆர்யா…
ஒரு கோயிலில் யாருக்கும் தெரியாமல் தனியாகவே திருமணம் செய்துக்கொண்டு… வெளியில் செல்லும்போது ஒரு விபத்தில் நஸ்ரியா இறந்துவிடுகிறார். இதைநேரில் பார்க்கும் ஆர்யா வாழக்கைவெறுத்து வாழ்கிறார்.
இப்படி தனித்தனியாக காதலை பறிக்கொடுத்த இருவரும் திருமணத்தில் இணையும்போது இருவரும் ஒட்ட மனவரவில்லை. அதன்பிறகு இவருவருக்கும் இவர்கள் வாழ்வில் நடக்கும் பழைய சம்பவங்களை தெரியவரும்போது ஏன் நாம் அதையெல்லாம் மறந்து புதிய வாழ்க்கையை துவங்கக்கூடாது என்று இல்லறத்தில் இணைகிறார்கள்.