ஏதேனும் ஆபத்து நேரும்போது காத்துக் கொள்வதற்கு மட்டுமல்ல, துணிவையும் தன்னம்பிக்கையையும் அடைய, பர்சனாலிட்டிப் பொலிவுற என தற்காப்புக் கலைகள் பல அனுகூலங்களை அளிக்கின்றன.
ஒருவர் தற்காப்புக் கலை கற்றவராக இருந்தால், அவர் தன்னை மற்றவர் முன் எடுத்துச் செல்லும் விதமே அட்டகாசமாக இருக்கும். உடல் பிட்டாக இருப்பதோடு, மனமும் சமநிலையை அடைகிறது. சென்ற தலைமுறை பெண்கள் தற்காப்புக் கலைகளை கற்க இருந்த தயக்கமும் சமூகத் தடையும் இன்றில்லை என்பதை, தற்காலத்தில் ஜிம்களில் ஒர்க் அவுட் செய்ய குவியும் பெண்களின் எண்ணிக்கையை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம்.