சென்னை எழும்பூர் தலைமை குற்றவியல் கோர்ட்டில், அகில இந்திய வக்கீல்கள் நலச்சங்கத்தின் தலைவர் மணிவண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து ‘காக்கா முட்டை’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை மணிகண்டன் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் வக்கீல் தொழிலை பற்றியும், வக்கீலை பற்றியும் அவதூறான வார்த்தைகளில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளது.
எனவே, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன், இயக்குனர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment