Friday 19 July 2013

நான் ஒரு கதை சொல்லுறேன் கேட்குறீங்களா ?


ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் ஊர் எல்லையில் வசித்து வந்தான்.
போவோர் வருவோர் அனைவரிடமும் பிச்சை கேட்டு நச்சரித்து வாழ்ந்து வந்தான்.
ஒரு சமயம் திடீரென இறந்து போனான்.

ஊர்காரர்கள் ஒன்றுகூடி அவனை அவன் வாழ்ந்து வந்த மரத்தின் கீழ் புதைப்பதென
முடிவு செய்து தோண்டினர்.அப்போது அந்த மரத்தின் கீழ் மூன்று பானைகளில்
தலா ஆயிரம் பொற்காசுகள் வீதம் இருந்தது.பாவம்! அந்த பிச்சைக்காரன் தன்
காலடியின் கிழே இருந்த பொக்கிஷத்தை அறியாமல் இப்படி பிச்சை எடுத்ததை
எண்ணி வருந்தினர்.

இதை போன்றே நாம் அனைவரும் ஆனந்தத்தை தேடி இந்த உலகத்தின்
மூலைமுடுக்கெல்லாம் தேடி அலைகிறோம்.ஆனால் அது அவரவர்
உள்ளதிலேயே இருப்பதை அறியாமல் அந்த பிச்சைக்காரனை
போல் தவிக்கின்றோம்

No comments:

Post a Comment