Saturday 3 August 2013

16 மொழிகளில் டப் ஆகிறது சில்க் படம்


சென்னை : சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி இருந்தனர். வித்யா பாலன் நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது.
இதையடுத்து சில்க்கின் வாழ்க்கையை ‘கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் மலையாளத்தில் எடுத்தனர். இது தமிழில், ‘ஒரு நடிகையின் டைரி’ என்ற பெயரில் வெளியானது.
இதையடுத்து கன்னடத்தில், ‘சில்க்: சக்கத் மகா’ என்ற பெயரில் அவர் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளனர். இதில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்துள்ளார்.

திரிசூல் இயக்கியுள்ள இந்தப் படத்தை 16 மொழிகளில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதுபற்றி திரிசூல் கூறும்போது,

‘’ பல்வேறு மொழிகளில் வெளியிட என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட 16 மொழிகளில் டப் செய்தோ அல்லது அந்தந்த மொழிகளில் கொஞ்சம் ஷூட் செய்தோ வெளியிட முடிவு செய்துள்ளோம்.

படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.

No comments:

Post a Comment