Saturday 17 May 2014

Vijay's Wishing to Modi



கோடான கோடி மக்களில் ஒருவனாக நானும் சந்தோஷமடைகிறேன்: நரேந்திர மோடி-ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நரேந்திர மோடி&ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோடான கோடி மக்களின் ஒருவனாக நானும் சந்தோஷமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வாழ்த்து

பாராளுமன்ற தேர்தல் முடிவு தொடர்பாக நடிகர் விஜய் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னை நேசிக்கும் அன்பான தமிழக மக்களுக்கு வணக்கம். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் இந்திய அளவில் ஓர் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் அதிக இடங்களை கைப்பற்றிய நரேந்திர மோடிக்கும், தமிழகத்தின் வரலாறு காணாத வெற்றியை பெற்றுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்தோஷம்

உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும், இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றி காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி சந்தோஷமடைகிறேன்.
இவ்வாறு நடிகர் விஜய் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment