Saturday, 20 July 2013

போசினியாவிற்கு உலக நீதிமன்றத்தில் வாதாடி தனிநாடு அந்தஸ்து வாங்கித் தந்த வழக்கறிஞர் கூறுகிறார்


அயல்நாட்டில் இயங்கும் தமிழ் ஈழ அரசு ஏற்பாடு செய்து பென்சில்வேனியா மாநில லேன்காஸ்டரில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் நாள்  ஒரு மாநாடு நடத்தப்பட்டது. கொந்தளிப்பு மிகுந்த உலக அரசியல் எனும்   பெருங் கடலினூடே விடுதலையை வென் றெடுத்தல் என்ற தலைப்பில் ஆற்றிய உரையாவது:

இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல்,  செய்த குற்றத்துக்கு தண்டனை அளித்தல் பற்றிய உலகின் அனைத்து நாடுகள் மாநாட்டில் 1948 இல் மேற்கொள்ளப் பட்ட தீர்மானத் தில் விளக்கிக் கூறியுள்ளபடி சிறீலங்கா நாட்டில் வாழ்ந்த, வாழ்ந்து வரும் தமிழர்கள் இலங்கை சிங்களப் பேரினவாத ஆட்சியாளரின் இனப்படு கொலை குற்றத்திற்கு பலியாகியுள் ளனர். 1948 அனைத்துலக நாடுகள் மாநாட்டுத் தீர்மானத்தின் அடிப் படையில் 8-4-1993 மற்றும் 13-9-1993 இரண்டு நாட்களிலும், போசினிய மக்களுக்கு எதிரான இனப்படு கொலைச் செயல்களை மேற்கொள்ளா மல் இருக்குமாறு யுகோஸ்லோவே கியா நாட்டைத் தடுத்து நிறுத்தும் உலக நீதிமன்றத்தின் ஆணைகளை தன்னந்தனியாகப் போராடி நான் 8-4-1993 மற்றும் 13-9-1993 ஆகிய நாட்களில் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறேன்.  ஸ்ரீலங்காவில் வாழும் தமிழர்கள் இனப்படுகொலை யினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற உண்மை ஒன்றே சர்வதேச சட்டத் தின்படி தங்களின் இறையாண்மை பற்றி சுயநிர்ணயம் செய்து கொள்ளும் உரிமையினை அவர்கள் பெற்றிருப் பதை உறுதிப்படுத்தி, வலுப்படுத்து கிறது. அவர்கள் விரும்பினால் தமிழ் ஈழம் என்னும் சுதந்திரமான நாட்டை உருவாக்கிக் கொள்ளும் உரிமையும் இதில் அடங்கும். 1988 ஆம் ஆண்டு நவம்பர் 15 அன்று  தங்களது சுதந் திரத்தை பாலஸ்தீன நாடு  பிரகடனம் செய்து வெளியிட்டது என்பதையும், இந்த  பாலஸ்தீன் நாட்டின் புதிய அரசுக்கு தற்காலிக அங்கீகாரம் அளிக்கப்பட்டது என்பதையும், 2012 நவம்பர் 29 அன்று அயக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இந்த புதிய பாலஸ்தீனிய நாடு நோக்குநர் என்ற முறையில் கலந்து கொள்ள அனுமதிக் கப்பட்டது என்பதையும், பாலஸ்தீனிய விடுதலை அமைப்பின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் என்னால் கூறமுடியும். இனப்படுகொலை என்னும் சர்வதேச குற்றத்தை இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் 2 ஆம் விதி கீழே குறிப் பிட்டுள்ளவாறு விளக்கிக் கூறுகிறது.

இப்போது நடைபெறும் மாநாட்டின் தீர்மானப்படி,   ஒரு தேசிய, இன அல்லது மதக் குழு மக்களின் ஒரு பகுதியி னரையோ அல்லது ஒட்டு மொத்த மாகவோ அழித்து ஒழிக்கும் நோக்கத் துடன் செய்யப்படும் கீழ்க்குறிப்பிடப்பட்ட செயல்கள் இனப்படுகொலை என்று பொருள்படும்.

அ) அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

ஆ) குழு உறுப்பினர்களுக்கு உடல் அளவிலோ அல்லது மன அளவிலோ பெரும் தீங்கு விளைவிக்கும் செயல் களைப் புரிதல்.

இ) குழு உறுப்பினர்களின் ஒரு பகுதி யினருக்கோ அல்லது முழுமையானவர் களுக்கோ உடல் அளவிலான அழி வினைக் கொண்டு வரும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட சூழ்நிலைகளை அக் குழுவினரின் மீது வேண்டும் என்றே திணிப்பது. இந்து, கிறித்துவ இலங்கைத் தமிழர் களுக்கு எதிரான இனப்படுகொலையை, புத்தமதம் தழுவிய இலங்கை சிங்கள வர்கள்   1948 முதல் செய்யத் தொடங்கி இன்று வரை தொடர்ந்து செய்து வருவது இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டின்  2(அ), (ஆ) மற்றும் (இ) விதிகளை நிச்சயமாக மீறுவதேயாகும்.

இந்து கிறித்து இலங்கைத் தமிழர் களின் தேசிய, இன, மொழி, மதக் குழு மக்களின் பெரும்பகுதியினரை அழித் தொழிக்கும் நோக்கத்துடன், ஓர் ஒருங்கிணைந்த,  முறையான ராணுவ, அரசியல், பொருளாதார, கலாச்சார, மொழிவழிப் பிரச்சாரத்தினை கடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கை சிங்கள புத்த மத மக்களும் பேரினவாத அரசும்   மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த சிங்களவர், புத்தர் மற்றும் இலங்கை அரசின் பிரச்சாரம் இனப்படுகொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (அ) யை மீறி உடல் அள விலும், மன அளவிலும் இந்து கிறித்துவ இலங்கைத் தமிழ் மக்களுக்குப் பெரும் தீங்கினை ஏற்படுத்தியுள்ளது.

இனப்படுகொலைத் தடுப்பு அனைத் துலக நாடுகள் மாநாட்டு தீர்மான விதி 2  (இ) யினை மீறி, இந்து கிறித்துவ இலங் கைத் தமிழர்களில் பெரும்பகுதியினருக்கு உடல் அளவிலான அழிவைக் கொண்டு வரும் நோக்கத்துடன், இந்த பிரச் சாரத்தை மேற்கொண்ட சிங்களர், புத்த மதத்தினரின் பேரினவாத இலங்கை அரசு வேண்டுமென்றே தமிழர்களது வாழ் வினை மோசமான சூழ்நிலைகளுக்கு உள்ளாக்கினர்.

1983 ஆம் ஆண்டு தொடங்கி இந்த சிங்கள புத்த மதக் கூட்டணி 3 லட்சத் துக்கும் மேற்பட்ட இந்து கிறித்துவ இலங்கை தமிழர்களை அழித்தொழித் துள்ளது. என்றாலும் தமிழ் மக்கள் மீது அவிழ்த்துவிடப்பட்ட இத்தகைய கொடு மைகளை யூதர்களுக்கு எதிராக நாஜிகள் மேற்கொண்ட இனப் பேரழிவுடன் ஒப்பிட முடியாது என்பதால், இலங்கை தமிழர் களின் மீதான இந்தத் தாக்குதலை  இனப்படுகொலை எனக் கூற முடியாது என்று பேரினவாத இலங்கை அரசும் சிங்கள புத்த மத வெறியர்களும் வாதாடு கின்றனர்.

உண்மையிலேயே நடைபெற்ற இனப் படுகொலையை மறைத்து முன்வைக்கப் படும் இத்தகைய  அறிவுக்குச் சற்றும் பொருந்தாத, ஏமாறச் செய்யும், உண்மையைப் போலத் தோற்றம் அளிக்கும் பொய்யான வாதத்தை முற்றிலுமாக எதிர்த்து,  மறுத்து  அனைத்துலக நீதிமன்றத்தில் யுகோஸ்லேவியாவுக்கு எதிராக, போசினியா மற்றும் ஹெர்சேகோ வினா மக்களாட்சி நாடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படு கொலை பற்றிய வழக்கில் அந்நாடு களின் வழக்கறிஞராக  வாதாடிய போது நான் வாதிட்டிருக்கிறேன். அப்போது எனக்கு எதிராகவும் யுகோஸ்லோ வேகியாவுக்கு ஆதரவாகவும் வாதாடிய வழக்கறிஞர் இஸ்ரேல் நாட்டு ஷப்தாய் ரோசன்னே என்பவர் ஆவார். தான் ஒரு யூதர் என்றும், போசினியர் களுக்கு யுகோஸ் லேவியா செய்ததை நாஜிகள் மேற்கொண்ட யூத இன அழிப்புடன் ஒப்பிடமுடியாது என்றும், இந்த நிகழ்வுகள் 1948 இனப்படு கொலைத் தடுப்பு அனைத்துலக நாடுகளின் மாநாட்டுத் தீர்மானத்தின் கீழ் வராது என்றும் உலக நீதி மன்றத்தில் ரோசன்னே வாதாடத் தொடங்கினார். ஓரின மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட ஒட்டு மொத் தக் கொடுமைகளை இனப்படு கொலைகள் என்று அழைக்க யூதர் களுக்கு எதிரான நாஜிகளின் இன அழிப்புடன் நீங்கள் ஒப்பிடத் தேவை யில்லை என்று ரோசன்னேயின் கூற்றினை மறுத்து நான் வாதா டினேன். 1948 இனப்படு கொலைத் தடுப்பு மாநாட்டின் ஒட்டு மொத்த நோக்கமே, யூதர்களுக்கு எதிராக நடைபெற்ற நாஜிகளின் இனப்படு கொலை போன்ற  ஒன்று மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதேயாகும். அதனால்தான் மாநாட்டுத் தீர்மான விதி 1 தெளிவாகக் கூறியுள்ளது: இனப்படுகொலை என்பது அமைதி காலத்தில் நடந்தாலும் சரி, போர்க் காலத்தில் நடந்தாலும் சரி தடுக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய அனைத்துலக சட்டப்படியான ஒரு குற்றமே என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் உறுதிப்படுத்துகின்றன. இனப்படுகொலை என்று கூறுவதற்கு யூதர்களைப் போல 60 லட்சம் மக்கள் இறந்திருக்க வேண்டும் என்று நீங்கள் கூற முடியாது.

No comments:

Post a Comment