Saturday, 27 July 2013

சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிக்கு சென்சார் போர்டு அனுமதி



மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘சிநேகிதியே’, ‘அரவான்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளத்தில் ‘களிமண்ணு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மலையாள இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார்.

பெண்களின் வாழ்க்கையை மையமாக வைத்து படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின்போது சுவேதா மேனன் கர்ப்பமாக இருந்தார். படத்தில் பிரசவ காட்சி ஒன்றை எடுக்க வேண்டி இருந்தது. இதில் சுவேதாவின் நிஜ பிரசவ காட்சியை படமாக்க பிளஸ்சி முடிவு செய்தார். இதற்கு சுவேதா மேனனும் சம்மதித்தார். அதன்படி, சுவேதா மேனனின் பிரசவத்தின்போது ஆபரேஷன் தியேட்டரில் வைத்து தத்ரூபமாக அந்த காட்சி படமாக்கப்பட்டது.

நிஜ பிரசவ காட்சியை படமாக்கியதற்கு கேரளாவில் பெண்கள் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. படத்தில் இருந்து அக்காட்சியை நீக்கவேண்டும். இல்லையென்றால் படம் வெளியாகும்போது போராட்டம் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்தனர். இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவுக்கு திரையிட்டு காண்பித்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சானறிதழ் கொடுத்துள்ளது.

இதுகுறித்து இயக்குனர் பிளஸ்சி கூறும்போது,

இப்படம் குறித்து எதிர்மறையான செய்திகள் வெளியாவது ஏன் என்று தெரியவில்லை. படத்தில் எதிர்ப்புக்குரிய காட்சிகள் ஏதும் இல்லை. பாடல், டிரெய்லர் பார்த்து சென்சார் அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 23-ந் தேதி படம் வெளியாகிறது.



No comments:

Post a Comment