மாமல்லபுரம்:புத்த கயா பாரம்பரிய கோவிலில் நடந்த, பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக, மாமல்லபுரம் பாரம்பரிய கலைச் சின்னங்களுக்கு, உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, எதிர்பார்ப்பும், கோரிக்கையும் எழுந்துள்ளது.மாமல்லபுரம், பல்லவ சிற்பக் கலைக்கு புகழ் பெற்றது. இங்குள்ள கடற்கரைக் கோவில், ஐந்து ரதங்கள், அர்ச்சுனன் தபசு, பல்வேறு குடைவரை மண்டபங்கள் என, 32 கலைச் சின்னங்களை, ஐ.நா., சபையின் கலாசார பிரிவு (யுனெஸ்கோ), சர்வதேச கலாசார சின்னங்களாக அங்கீகரித்துள்ளது. இதைக் கண்டுகளிக்க, உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து, ஏராளமானோர் வருகின்றனர்.
இத்தகைய பாதுகாப்பற்ற சூழலில், இத்துறைக்கு போதிய ஊழியர்களை நியமிக்காமல், மத்திய அரசு புறக்கணிக்கிறது.
No comments:
Post a Comment