Friday, 16 August 2013

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால்…: தமன்னா



சென்னை: தமன்னா அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரிவித்துள்ளார். தமன்னா அஜீத் குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்து வருகிறார்.

இது தவிர அவரது கையில் தற்போதைக்கு தமிழ் படங்கள் இல்லை. அவருக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர ஆசை உள்ளது. அவர் கையில் 2 இந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் உள்ளது.

உடற்பயிற்சி, டயட், நடனம் ஆகியவை தான் தனது அழகின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
ஐஸ்வர்யா ராய் மாதிரி நடனம் ஆட வேண்டும், சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று தமன்னா ஆசைப்படுகிறார்.

tamanna1தமன்னா அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு ஏராளமான கழிவறைகள் கட்டுவாராம். தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டங்கள் கொண்டுவருவாராம். சாலையில் குப்பையைப் போடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பாராம்.

கடவுள் மட்டும் வரம் கொடுத்தால் அடுத்த பிறவியில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தாக பிறக்க தமன்னாவுக்கு ஆசையாம்.

No comments:

Post a Comment