ஜீவா தற்போது ‘என்றென்றும் புன்னகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு ‘நீ நல்லா வருவடா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் கருணாகரன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்திரமோகன் இயக்குகிறார்.
இப்படத்தை ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
நஸ்ரியா தற்போது தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ஆர்யா, நயன்தாராவுடன் ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
‘நீ நல்லா வருவடா’ என்ற தலைப்பு ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சந்தானம் பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment