Saturday, 24 August 2013

வீரப்பன் மனைவியாக நடிக்க மறுத்த பிரியாமணி!


சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தனர்.

இந்த படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்தார். அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.


இந்நிலையில், வீரப்பன் கதையில் இன்னும் சொல்லப்படாத பக்கங்களை படமாக்க கன்னட இயக்குனர் ஒருவர் களமிறங்கியுள்ளார். இதற்காக, வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப் பகுதிகளுக்கு சென்று லொகேஷன்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.

இந்த படத்தில் வீரப்பன் மனைவி வேடத்தில் நடிக்க பிரியாமணியை அணுகியுள்ளனர். ஆனால், இதில் நடிக்க பிரியாமணி மறுத்துவிட்டாராம். வீரப்பன் கதையை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.


அதனால் மீண்டும் அந்த கதையில் நடித்து அவர்களின் வெறுப்புக்கு ஆளாக தயராக இல்லை என்று கூறி நழுவிக் கொண்டாராம். இதையடுத்து, வேறு நாயகியை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment