Friday, 30 August 2013
Saturday, 24 August 2013
வசூலில் சாதனை புரியும் சென்னை எக்ஸ்பிரஸ்
ஷாருக்கானின் நடிப்பில் வெளிவந்துள்ள சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படம் வசூலில் சாதனை புரியத் துவங்கியுள்ளது.
இந்தப் படத்தின் மாபெரும் வெற்றி ஷாருக்கானை திரையுலகில் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.2013ஆம் ஆண்டில் இதுவரை வெளிவந்த அனைத்துப் படங்களின் வசூலையும் இந்தப் படம் முறியடித்துள்ளது.
இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே வசூலில் மூன்றாவது இடத்தைப் பெறுகின்றது என்று வர்த்தக ஆய்வாளரான தரன் ஆதர்ஷ் தன்னுடைய இணையதளச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் திரைக்கு வந்த ஹிந்தியின் சாதனைப் படமான ஏ ஜவானி ஹேய் திவானியின் வசூலை தாண்டிவிடும் என்று கூறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ், விரைவில் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டவுள்ளது.
இதன்மூலம், இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் படமாக இது கருதப்படுகிறது. பெரிய நகரங்களான மும்பை,டெல்லி, பூனே, பெங்களூர் மட்டுமின்றி, திரையிடப்பட்ட சிறிய நகரங்களிலும் இந்தப் படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
வெளிடப்பட்ட பிற நாடுகளிலும், குறிப்பாக அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, லண்டன் ஆகிய இடங்களிலும் இந்த படம் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
வீரப்பன் மனைவியாக நடிக்க மறுத்த பிரியாமணி!
சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தனர்.
இந்த படத்தில் கிஷோர் வீரப்பனாக நடித்தார். அர்ஜூன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், கன்னடம் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியான அப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை.
இந்நிலையில், வீரப்பன் கதையில் இன்னும் சொல்லப்படாத பக்கங்களை படமாக்க கன்னட இயக்குனர் ஒருவர் களமிறங்கியுள்ளார். இதற்காக, வீரப்பன் பதுங்கியிருந்த காட்டுப் பகுதிகளுக்கு சென்று லொகேஷன்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்துள்ளனர்.
இந்த படத்தில் வீரப்பன் மனைவி வேடத்தில் நடிக்க பிரியாமணியை அணுகியுள்ளனர். ஆனால், இதில் நடிக்க பிரியாமணி மறுத்துவிட்டாராம். வீரப்பன் கதையை திரும்பத் திரும்ப பார்த்து ரசிகர்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்.
அதனால் மீண்டும் அந்த கதையில் நடித்து அவர்களின் வெறுப்புக்கு ஆளாக தயராக இல்லை என்று கூறி நழுவிக் கொண்டாராம். இதையடுத்து, வேறு நாயகியை தேர்வு செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
Wednesday, 21 August 2013
ஜீவாவுக்கு ஜோடியாகிறார் நஸ்ரியா
ஜீவா தற்போது ‘என்றென்றும் புன்னகை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிறகு ‘நீ நல்லா வருவடா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் கருணாகரன் என்பவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சந்திரமோகன் இயக்குகிறார்.
இப்படத்தை ஜீவாவின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் தயாராகிறது.
இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்கிறார். அக்டோபர் முதல் வாரத்தில் படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.
நஸ்ரியா தற்போது தனுஷுடன் ‘நய்யாண்டி’, ஜெய்யுடன் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ஆர்யா, நயன்தாராவுடன் ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
‘நீ நல்லா வருவடா’ என்ற தலைப்பு ஜீவா நடித்த ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் சந்தானம் பேசும் வசனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tuesday, 20 August 2013
திருமணமான தம்பதிகளுக்கு…
திருமணமான தம்பதிகள் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் எப்படி பாலுறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பது பற்றி அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
அதில் பெரும்பாலான தம்பதிகள் சுவாரஸ்யம் இன்றி பதிலளித்த போதிலும், பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகும் கூட தீவிர செக்ஸ் உறவு வைத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இது எப்படி சாத்தியம்? கணவருடன் வாரம் ஒரு முறையாவது வெளியே ஹோட்டலுக்குச் சாப்பிடச் செல்ல வேண்டும். முடிந்தால் சினிமா, சுற்றுலா அல்லது பார்ட்டி என ஏதாவது நிகழ்ச்சிக்கு சேர்ந்து செல்லலாம்.
அப்படிச் செல்வதால் அன்யோன்யம் அதிகரிப்பதுடன் பாலுறவில் ஈடுபாடு குறையாமல் நீடிக்கும் என்று அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட இடைவெளியில் இருவரின் உடல்நிலைக்கு ஏற்ப பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ளலாம்.
பாலுறவுப் புணர்ச்சி வைத்துக் கொள்ளாத நிலையிலும் சிறு, சிறு மகிழ்ச்சியை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதால் பரஸ்பர அன்பு விலகாமல் நீடிக்கும் என்பதும் பல தம்பதிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவில் சுமார் 24 ஆண்டுகள் இணைபிரியாத தம்பதியாக வாழும் மார்க்-ஜெல்டா கூறுகையில், தாங்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகக் கூறினர்.
அதற்குக் காரணம் குழந்தைகள் இருந்த போதிலும், தங்கள் மகிழ்ச்சி பாதிக்காதவாறு வாழ்க்கையை பின்பற்றி வருவதாகவும், குழந்தைகளுக்கும் தேவையான சுதந்திரத்தை அளித்துள்ளதால் அவர்களும் தங்களைப் புரிந்து நடந்து கொள்வதாகவும் கூறினர்.
மணவாழ்க்கை என்பது மணம் வீச வேண்டுமே தவிர, துர்மணமாகி விடக்கூடாது.
சிறு சிறு பிரச்சினைகளுக்குக் கூட கூச்சலிட்டு, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு அளிக்கக்கூடிய தம்பதிகளையும் கண்கூடாக பார்த்திருக்கிறோம்.
பாலுறவுப் புணர்ச்சி தொடர்பாக பல குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியாவைப் பொருத்தவரை பாலுறவுப் புணர்ச்சி தொடர்பான கருத்து வேறுபாட்டால் மட்டுமே மணமுறிவு ஏற்பட்டு விடுவதில்லை.
ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் பாலுறவுப் பிரச்சினைக்காக பிரிந்த குடும்பங்கள் ஏராளம்.
எனவே மனம் விட்டுப் பேசி மகிழ்வோம். முடிந்தவரை தம்பதியரில் இருவரின் நிலைக்கேற்ப பாலுறவுப் புணர்ச்சி மேற்கொள்வோம். இன்பத்தின் எல்லையை அடைவோம்.
Sunday, 18 August 2013
தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா நிர்வாண போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். யுனிவர்சிட்டி தமிழ் படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ரா.
காமசூத்ரா 3 டி ஆங்கில படத்திலும், கேம், ரெட் சுவஸ்திக் போன்ற இந்தி மற்றும் எ பிலிம் பை அரவிந்த், வெண்டி மப்புலு போன்ற தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். ஆங்கில இதழ் பிளேபாய் அட்டை படத்துக்காக இவர் ஏற்கனவே நிர்வாண போஸ் கொடுத்ததுடன் அந்த படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல் காமசூத்ராவில் நடித்த கவர்ச்சி படங்களையும் வெளியிட்டிருந்தார்.
நேற்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மற்றொரு நிர்வாண படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார். பப்ளிசிட்டிக்காக ஷெர்லின் அடிக்கடி இதுபோல் நடந்து கொள்கிறார். ஆனாலும் அவருக்கு பட வாய்ப்புகள் கொட்டப்போவதில்லை. காரணம் அவரிடம் நடிப்பு, டான்ஸ் திறமை இல்லை என்கிறது பாலிவுட் வட்டாரம்.
Friday, 16 August 2013
நான் மட்டும் அரசியலுக்கு வந்தால்…: தமன்னா
சென்னை: தமன்னா அரசியலுக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வார் என்பதை தெரிவித்துள்ளார். தமன்னா அஜீத் குமார் ஜோடியாக வீரம் படத்தில் நடித்து வருகிறார்.
இது தவிர அவரது கையில் தற்போதைக்கு தமிழ் படங்கள் இல்லை. அவருக்கு பாலிவுட்டில் ஒரு ரவுண்ட் வர ஆசை உள்ளது. அவர் கையில் 2 இந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் உள்ளது.
உடற்பயிற்சி, டயட், நடனம் ஆகியவை தான் தனது அழகின் ரகசியம் என்று தெரிவித்துள்ளார் தமன்னா.
ஐஸ்வர்யா ராய் மாதிரி நடனம் ஆட வேண்டும், சந்திரமுகி போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று தமன்னா ஆசைப்படுகிறார்.
tamanna1தமன்னா அரசியலுக்கு வந்தால் பெண்களுக்கு ஏராளமான கழிவறைகள் கட்டுவாராம். தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து சட்டங்கள் கொண்டுவருவாராம். சாலையில் குப்பையைப் போடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பாராம்.
கடவுள் மட்டும் வரம் கொடுத்தால் அடுத்த பிறவியில் பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித்தாக பிறக்க தமன்னாவுக்கு ஆசையாம்.
Thursday, 15 August 2013
இன்டர்நெட்டில் ‘ஆபாச படம்’: ஹன்சிகா
நடிகை ஹன்சிகா ஆபாசமாக இருப்பது போன்ற படம் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சியாகியுள்ளார்.
மதுபான பார் ஒன்றில் சிம்புவை ஹன்சிகா அரைகுறை ஆடையில் இறுக்கமாக கட்டி அணைத்தபடி நிற்பது போன்று இப்படம் உள்ளது. இப்படங்களை இன்டர்நெட்டில் பரவவிட்டது யார் என்று தெரியவில்லை.
நயன்தாராவுடன் சிம்பு தொடர்பில் இருந்தபோதும் இதுபோல் படங்கள் வந்தன. ஆபாச படம் பற்றி ஹன்சிகா கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் அதிர்ந்தார். அப்போது படத்தில் இருப்பது நான் இல்லை என்றார்.
இருவர் படங்களையும் மார்ப்பிங் செய்து ஒட்ட வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஹன்சிகா சமீபத்தில் தான் பிறந்தநாளை கொண்டினார். ஆதவரற்ற பெண் குழந்தையொன்றை தத்தெடுக்கவும் செய்தார். இந்த நிலையில் ஆபாச படம் வந்துள்ளதால் சங்கடத்தில் இருக்கிறார்.
Sunday, 11 August 2013
நெட்டில் அதிகம் தேடப்பட்ட சன்னி லியோன்
Sunny-Leones |
மும்பை: கூகுள் உள்ளிட்ட இணையதளங்களில் அதிக அளவில் தேடப்பட்ட பிரபலங்களின் வரிசையில் சன்னி லியோனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
அவரைத்தான் அதிகம் பேர் தேடிப் பார்த்துள்ளனராம் இணையதளத்தில்.
கூகுள், யூடியூப் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளங்கள் இணைந்து இதுதொடர்பான ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளன.
சன்னி லியோன் தொடர்ந்து ஆன்லைனில் முன்னணியில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி சன்னி லியோனை 3.5 கோடி முறை இணையதளத்தில் தேடிப் பார்த்துள்ளனராம்.
காத்ரீனா கைப் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரை இணையதளத்தில் 1.85 கோடி முறை தேடிப் பார்த்துள்ளனர்.
இந்த வரிசையில் சல்மான் கானுக்கும் இடம் கிடைத்துள்ளது. அவர் 4வது இடத்தில் இருக்கிறார். அதேபோல டாப் 5 இடங்களில் இடம் பெற்றுள்ள ஒரே ஆண் மகன் இவர் மட்டுமே.
Sunny-Leones-hot |
கரீனா கபூர் 3வது இடத்தில் இருக்கிறார். 5வது இடத்தில் ஐஸ்வர்யா ராய் இருக்கிறார். இவர்களுக்கு நடுவில் சல்மான் கானுக்கு இடம்கிடைத்துள்ளது.
Wednesday, 7 August 2013
டெல்லியில் ‘ஸ்டூடண்ட் விசா’வில் வந்து விபச்சாரம்
டெல்லி: டெல்லியில், ஸ்டூடண்ட் விசாவில் மாணவிகள் போர்வையில் வந்து விபச்சாரத்தில் ஈடுபடும் வெளிநாட்டு பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு பெண்களுக்கு பொதுவாகவே பாலியல் தொழிலில் மவுசு அதிகமாம். அதிலும் இளம்பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாமாம். எனவே, இதை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ளும் பாரின் கால்கேர்ஸ், ஸ்டூடண் விசாவில் மாணவிகள் போல் இந்தியாவிற்குள் நுழைந்து விபச்சாரம் செய்வது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிலும் குறிப்பாக, பார்முலா 1 ரேஸ் மற்றும் ஐபிஎல் காலங்களில் இவர்களது காட்டில் மழைதானாம்.
சில பாலியல் புரோக்கர்கள் இவர்களை கிட்டத்தட்ட 15 நாட்களுக்குக் கூட மொத்தமாக குத்தகைக்கு எடுத்து விடுகிறார்களாம்.
அப்பெண்களுக்கு தேவையான போக்குவரத்து மற்றும் தங்குமிடம் குறித்த செலவுகள் அனைத்தும் புரோக்கர்கள் பொறுப்பாகும்.
இத்தகைய வெள்ளைத் தோல் அழகிகளைக் காட்டி, வாடிக்கையாளர்களிடம் ரூ25000 முதல் ஒரு லட்சம் வரை கறந்து விடுகிறார்களாம் தரகர்கள்.
வெளிநாட்டிற்கும், இந்தியாவிற்குமாக பறந்து, பறந்து பாலியல் தொழில் செய்யும் அந்தப் பெண்களுக்கு சுலபமாக மாதம் ரூ 20லட்சம் வரை சம்பளம் கிடைத்து விடுகிறதாம்.
Saturday, 3 August 2013
16 மொழிகளில் டப் ஆகிறது சில்க் படம்
சென்னை : சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக்கி இருந்தனர். வித்யா பாலன் நடித்திருந்த இந்தப் படம் ஹிட்டானது.
இதையடுத்து சில்க்கின் வாழ்க்கையை ‘கிளைமாக்ஸ்’ என்ற பெயரில் மலையாளத்தில் எடுத்தனர். இது தமிழில், ‘ஒரு நடிகையின் டைரி’ என்ற பெயரில் வெளியானது.
இதையடுத்து கன்னடத்தில், ‘சில்க்: சக்கத் மகா’ என்ற பெயரில் அவர் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளனர். இதில் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்துள்ளார்.
திரிசூல் இயக்கியுள்ள இந்தப் படத்தை 16 மொழிகளில் டப் செய்து வெளியிட உள்ளனர். இதுபற்றி திரிசூல் கூறும்போது,
‘’ பல்வேறு மொழிகளில் வெளியிட என்னை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட 16 மொழிகளில் டப் செய்தோ அல்லது அந்தந்த மொழிகளில் கொஞ்சம் ஷூட் செய்தோ வெளியிட முடிவு செய்துள்ளோம்.
படத்துக்கு ஏ சர்டிபிகேட் கிடைத்திருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறோம்’’ என்றார்.
உங்கள் ராசிக்கு காதல் உறவுகள் எவ் வகையில் அமையும் என்பதை பார்ப்போம்
மேஷம்
இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் காதலில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். இவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரை எளிதாக கவர்ந்து அவரை காதலில் விழ வைப்பதில் கில்லாடி. இவர்கள் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் எழுத்தாளராகவோ, நடிப்புத் துறையில் இருந்தாலோ அவர்களுக்கு அதிக ரசிகர்கள் இருப்பர். மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். எதிர்பாலரிடம் ஆர்வம் எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். காதல் ஏற்படுவது இவர்களுக்கு அரிதே. மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும். இவர்களை மகரம் மற்றும் மேஷ ராசிக்காரர்கள் கவர்வர். ஆனால் இவர்களது ஆர்வம் காதலாக மாறாது.
கடகம்
இவர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம். உணவையும், தாம்பத்யத்தையும் இவர்கள் சமமாக கருதுவர். கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது. இவர்களது இதயத்தில் பல விஷயங்கள் இருக்கும். இவர்களது மனதில் இருக்கும் காதல் சிறப்பாக இருந்தாலும், இவர்கள் சிறந்த காதலராக இருக்க மாட்டார்கள். ஒருவரை விட்டுவிட்டு மற்றொருவரை காதலிக்கும் மனப்பாங்கு இருக்கும். எது சரி எது தவறு என்று தெரிந்திருந்தும் அதனை திருத்திக் கொள்ள மாட்டார்கள். ரொமான்டிக் எண்ணம் அதிகம் இருக்கும். சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காராகள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். காதலில் சிம்ம ராசிக்காரர்கள் திறமையாக செயல்பட மாட்டார்கள். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்.
கன்னி
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் விருப்பமுடையவர்கள். இந்த ராசி இருப்பவர்கள் நல்ல குனம் உடையவர்கள். ஆனால் இந்த குணம் உடையவர் லட்சியத்தை கடைபிடிக்க மாட்டார்கள். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது. கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும், மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள். அவர்களுடைய முயற்சி வெற்றியை கொடுக்கும்.
துலாம்
எப்போதும் அடாவடியாக பேசிக் கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்கள், யாரும் எதிர்கொள்ளாத புதிய அனுபவங்களையும், நிகழ்ச்சிகளையும் எதிர்கொள்வர். இவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால் இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது. துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார். ஆனால் அவரிடம் சிறந்த குணமிருக்காது. விருட்சிக ராசிக்காரருடன் துலாம் ராசிக்காரர் காதல் கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருட்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடல் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். தன்னையே விரும்புபவராகவும், ஒரு சில நேரங்களில் தன்னையே வெறுப்பராகவும் இருப்பார்.எப்போதும் உற்சாகமாக இருப்பார். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார். இளமை பருவத்தில் சிறிது தடுமாறினாலும், தனது ஆழ்ந்த சிந்தனையால் தடுமாற்றத்தில் இருந்து விடுபடுவார். துணையை சந்தேகிக்கும் குணம் இருக்கும். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருப்பர்.
தனுசு
இவர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாளியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். ஒரு சமயம் அமைதியாகவும், ஒரு சமயம் ஆக்ரோஷமாகவும் காணப்படுவார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார். தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர்.
மகரம்
இவர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால் காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. யாரையும் நம்பிவிடுவர். தனுசு ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக காதல் அனுபவம் இருக்கும். மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும். இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். இவர்களுடைய கற்பனை மிக வித்தியாசமாக இருக்கும். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும். கும்ப ராசிக்காரர்களுக்கு எதிர்பாலருடன் ஏற்படும் ஈர்ப்பு சில சமயம் விபரீதத்திலும் முடியும். உயர்ந்த பதவியில் அமர்ந்த பின்னர் உங்கள் காதலை தெரிவிப்பது உத்தமம்.
மீனம்
மீன ராசி காரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். எப்பொழுதும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி நிலைபெற்றிருப்பதில் மீனராசிக் காரர்களின் ஸ்பாவம் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருக்கும். இவர்கள் இயற்கையை விரும்புவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். எப்பொழுதும் நற்குணங்களை கொண்டவர். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. இந்த ராசிக் காரர்களே யோசித்து எல்லா காரியங்களையும் நடத்தி முடிப்பார். இந்த ராசிக் காரர் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர். அன்பிற்காக இவர் அனைத்தையும் அழிக்கவும் முடிவு செய்பவர். இவர்களுக்கு கன்னி ராசிக் காரர்களுடன் திருமணம் நடக்க வாய்ப்புண்டாகும்.
Subscribe to:
Posts (Atom)